பல நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் தவறான திசையில் பயணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலகத் தலைவர்களால் வௌியிடப்படும் தவறான தகவல்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நம்பிக்கையைத் தகர்த்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகள் தவறான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்த விடயத்தை நான் வௌிப்படையாகத் தெரிவிக்கின்றேன்.
இந்த வைரஸ் முதலாவது பொது எதிரியாகத் தோற்றம் பெற்றுள்ளது.
ஆனால், பல அரசாங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிபலிப்புகள் அவ்வாறான கோணத்தைக் கொண்டிருக்கவில்லை.
தலைவர்களின் முரண்பட்ட கருத்துக்கள் பதில் வழங்கல் என்பன நம்பிக்கையை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்துகின்றன.
என Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கங்கள் தமது நாட்டு மக்களுடன் உரிய தொடர்பாடலைப் பேணாமை, மக்களின் வாழ்வியலைப் பாதுகாப்பதற்கான உரிய மூலோபாயத்தை விரிவுபடுத்தாத நிலையைத் தோற்றுவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை பொது சுகாதார கொள்கைகளை மக்கள் பின்பற்றாமையே தொற்று பரவுவதற்கான காரணமாக அமையும் எனவும் தற்போதைய நிலை மோசமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.