பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – அரசாங்கம் திட்டவட்டம்

0

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அவசரகால சூழ்நிலையில் கூட பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டபோவதில்லை என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அவசரகால நிலைமையை அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.