பாதுகாப்பு அமைச்சில் அமெரிக்க உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் – ஞானசார தேரர் எச்சரிக்கை!

0

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன என்பவர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் ஒரு சிங்கப்பூர் பிரஜையும் ஆவார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர், பேராசிரியர் ரொஹான் குணரத்ன உட்பட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்குக்கூட இஸ்லாமிய அடிப்படைவாத விடயங்கள் பற்றி துளியளவேனும் அறிவற்றவர்களாக காணப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.