பிரதமர் மோடிக்கு அனுப்படும் ஆவணத்தில் மலையக்கட்சிகள் கையொப்பமிடவில்லை!

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன.

கடந்த 21 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்பட பல தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர்.

அந்த ஆவணம்விரைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த ஆவணத்தில் இரா. சம்பந்தன், நீதியரசர் சிவீ விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டனர். மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடவுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.

அவரதுதரப்பினதும், முஸ்லிம் தரப்பினதும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் பங்களிப்பு இல்லாமலேயேபொது ஆவணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்கு மனோவிடம் நேரிலும், ஹக்கீமுக்கு தொலைபேசியிலும் சம்பந்தன் தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்படி சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள், விரைவில் இந்தியத் தூதுவரை சந்தித்து ஆவணத்தை கையளிக்கவுள்ளன.