பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள் 207 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் UL 504 என்ற விமானத்தில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களிடம் இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசேட பேரூந்துகளில் மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மற்றுமொரு குழுவினரை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் ஒன்று பிரித்தானியாவின் Heathrow விமான நிலையம் நோக்கி பயணித்துள்ளது.