புதிய அமைச்சுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

0

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

அத்தோடு, அவர் அமைச்சுப் பதவியொன்றையும் இன்றையதினம் பெற்றுக்கொள்ளவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய அமைச்சுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.documents.gov.lk/files/egz/2021/7/2235-45_T.pdf