அரசாங்கம் மற்றும் புதிய பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரேனா தொற்று தொடர்பான சவால்கள் காணப்படுகின்ற போதிலும், அமைதியுடனும் உரிய நடைமுறைகளுடனும் தேர்தலை நடாத்தியதை முன்னிட்டு இலங்கைக்கு பாராட்டு தெரிவிப்பதாக அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
புதிய பாராளுமன்றம் கூட்டப்படுவதன் மூலம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மனித உரிமைகள் மற்றும் நாட்டில் சட்டவாட்சியை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என தாம் நம்புவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடும் அவற்றில் உள்ளடங்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.