பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

0

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகை இடம்பெறவுள்ளது.

இந்த ஒத்திகை அம்பலாங்கொடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும் 200 வாக்காளர்களை மையப்படுத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த ஒத்திகையின் அனுபவத்துடன் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.