பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன!

0

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன.

ரம்புக்கனை நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சாமிந்த லக்ஷான் உயிரிழந்தார்.

அவரின் பூதவுடல் நேற்று அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், நேற்று பிற்பகல் முதல் சர்வகட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் ஹிரவட்டுன மயானத்தில் இன்று நடைபெற்றன.