போதைப் பொருள் வாங்க இருபது லட்சத்திற்கு சிறுநீரகத்தை விற்ற இளைஞர்!

0

போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை 20 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த நபர் குறித்து மஹரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

துணிகளைத் திருடி விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் இதனை கூறியுள்ளனர்.

சந்தேக நபர் மஹரகம பகுதியில் நடைபாதையில் விற்பனையாளர்களிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடைகளை திருடி புறக்கோட்டையில் உள்ள பல கடைகளுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து இரண்டு கிராம் மற்றும் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பறப்பட்டுள்ளது.

36 வயதான சந்தேக நபர் பேலியகொடையில் உள்ள துட்டுகேமுனு மாவத்தை பகுதியில் வசிப்பவர் எனவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.