மட்டக்களப்பில் கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்றிட்டத்தில் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மாநகரசபை இணைந்து நகரத்தின் பொது இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொற்று நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் நகரின் பிரதான வீதி மற்றும் கடைத் தொகுதிகள் அடங்கிய பகுதி, பேருந்து தரிப்பிடம், மக்கள் கூடும் இடங்களில் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில், பொலிஸாரின் தண்ணீர் வீசிறும் வாகனம் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் மாநகரசபை மேயர் ரி.சரவணபவன், மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி பி.கே. ஹட்டியாராச்சி மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டு இந்த தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.