மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

0

தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் புகை விசிறும் செயற்பாடுகளை இன்று (சனிக்கிழமை) காலை முதல் சுகாதார திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை மட்டு.சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில்  வாராந்தம் 10பேர் வரையில் டெங்கு நோயின் பாதிப்புக்கு உள்ளாகின்றமை இனங் காணப்பட்டுள்ளதுடன். அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அம்மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மேலும் மழையுடன் கூடிய காலநிலை தற்போது நிலவுகின்றமையினால், சுற்றாடலில் நீர் தேங்கும் இடங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான பொருட்களை சுற்றாடலிலிருந்து அகற்றுதல் ஆகியவற்றினை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.