மட்டக்களப்பு புதூரில் ஒருவர் மீது வாள்வெட்டு – 4 பேர் கைது!

0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20ம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர்  மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடிய 4 பேரை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளதுடன் வாள் ஒன்றை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான கடந்த மே மாதம் 20 ம் திகதி துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை பழைய பகை காரணமாக அவரை மறித்து அவர் மீது 6 பேர் கொண்ட குழுவினர் வாள்வெட்டுதாக்குதலை நடாத்தினர் இதில் அவர் படுகாயமடைந்ததையடுத்து தாக்குதலை  மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இதனையடுத்து இத் தாக்குதலில் படுகாயமடைந்தவரை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிசார்  தலைமறைவாகி வந்த 22, 35, 45, 40 வயதுடைய நான்குபேரை இன்று கைது செய்ததுடனன் வாள் ஒன்றை மீட்டனர்.

இதில் கைது செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தலைமறைவாகியுள்ள இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.