இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசு மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் சட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, சட்டத்தில் மாற்றம் செய்யாமல் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.