மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற படகு மாயம்

0

கடந்த மாதம் 30 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற ‘கவீஷா துவ’ எனப்படும் மீன்பிடி படகொன்று 5 மீனவர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற போதே காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த மீனவர்களுடனான தொடர்பு கடந்த 9 ஆம் திகதி முதல் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்தினம் படகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.