முன்பள்ளிகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்

0

நாடளாவிய ரீதியில் உள்ள முன்பள்ளிகளை விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

விசேட வைத்திய நிபுணர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, அனைத்து முன்பள்ளிகளிலும் 50 வீத செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

நாடு மீள திறக்கப்பட்டதன் பின்னர் தங்களின் பிள்ளைகளுக்கான ஆரம்பநிலைக் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக முன்பள்ளிகளைத் திறக்குமாறு பெற்றோர்களிடமிருந்து கோரிக்கை கிடைத்ததாக சுகாதார அமைச்சர் கூறினார்.

இந்த கோரிக்கைக்கு அமைய, முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி, முன்பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளிகளை மீள திறப்பதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.