முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் புதிதாக பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதனால் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்றினை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். அத்தோடு முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியிலும் சிலாவத்தை பகுதியிலும் புதிதாக ஒரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை கெடுபிடிகள் அதிகரித்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் தொடர்ச்சியாக இராணுவத்தினர் புதிது புதிதாக இராணுவ சோதனைச் சாவடிகளை அமைத்து வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.