வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன், 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று(வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக கை உயர்த்தும் அடிப்படையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி  நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், நேற்றைய வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்திருந்தனர்.