எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி முதல் பாடசாலை நேரத்தை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை தொடரும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்து.