வவுனியாவில் இலவசமாக மரக்கறி விநியோகம்

0

நாட்டின் 19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு அதிகமாக வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றால் மரக்கறிவகைகள் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

சுமார் 25 ஆயிரம் கிலோ மரக்கறி வகைகள் காலை 9 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை இலவசமாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வங்கிகள் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு இன்றைய தினம் அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்த நிலையில் வரிசையில் நின்று தமது சேவைகளை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.