தனியார் மற்றும் அரச துறையினர் தொழிலுக்கு செல்லும்போது முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாடகை வாகனங்களை போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தொழிலுக்கு செல்வோர், தனியாரினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
தொழிலுக்கு செல்வோர் பயன்படுத்தும் வாடகை வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
தொழிலுக்கு செல்வோருக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் தனியாருக்கு எதிராக ஊரடங்கு சட்ட விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.