அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை கைது செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பெறுவதற்காக போலியான ஆவணங்களை வழங்கியமை தொடர்பாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, உடல்நல பாதிப்பு காரணமாக சசியால் மன்றில் முன்னிலையாக முடியவில்லை என சசி சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய சட்டத்தரணி தெரிவித்தார். எனினும் சசியின் சார்பில் அதனை உறுதி செய்வதற்காக மருத்துவசான்றிதழை சமர்ப்பிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, சசி வீரவன்சவை கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பித்து கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார்.