பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படல் கூடம் இன்று 12 மணிமுதல் முதல் திறக்கப்பட்டுள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது.
இது குறித்து முகப்புத்தகத்தில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதுடன் விமானப் பயணி ஒருவருடன் 3 பேர் வழியனுப்பல் கூடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புறப்படல் கூடத்திற்கு செல்பவர்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றினை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.