வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் இராசமாணிக்கம் சாணக்கியன் – தமிரழசு கட்சி சார்பில் களமிறங்குகின்றார்

0

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் வகையில் இராசமாணிக்கம் இரா. சாணக்கியன் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் முன்னிலையில் அவர் தனது வேட்பு மனுவில் கையொப்பமி்ட்டுள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அவர் களமிறங்கியுள்ளார் என்பது விசேட அம்சமாகும்.

இராசமாணிக்கம் அமைப்பின் ஊடாக இரா.சாணக்கியன் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக வறுமை கோட்டின் கீ்ழ் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றார்.

அதேபோன்று இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.