10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் – பெயர் பட்டியல் வெளியானது!

0

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10 ஆயிரம் பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அவர்களது பயிற்சிக்காலம் நிறைவுபெற்ற நிலையில், இந்த நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலக மட்டத்தில் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் நிரந்தர சேவைக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை திட்டமிட்டவாறு முன்னெடுக்க முடியவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியலை https://www.pubad.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.