அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி இருக்கின்றது.
எனினும், 20 இற்கு ஆதரவளித்து அல்லது வாக்களிப்பின்போது நடுநிலை வகித்து ஆளுங்கட்சிக்கு நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும், இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் இருக்கின்றது.
இதற்காரணமாகவே 20 தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தமது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது எனவும் தெரியவருகின்றது.