2021ஆம் ஆண்டு பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடலாம்!

0

2021ஆம் ஆண்டு, மனிதாபிமான பேரழிவு ஆண்டாகக் காணப்படப்போவதாக  உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லே எச்சரித்துள்ளார்.

பல நாடுகளின் கதவை பஞ்சம் தட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐ.நா ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், உலகம் 2021ஆம் ஆண்டில் மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளநேரிடலாம் என உலக உணவு திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எங்களால் அனைத்துக்கும் நிதி வழங்க முடியாது. இதன் காரணமாக நாங்கள் முன்னுரிமைக்குரிய விடயங்களை தீர்மானிக்கவேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் மருந்திற்காக செல்வந்தவர்களும் வலுவானவர்களும் ஏழைகளை மிதிக்கின்ற உலகத்தை எங்களால் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது சர்வதேச நெருக்கடி இதற்கான தீர்வுகள் சமமாகவும் உலகத்தின் நன்மைக்காகவும் பகிரப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.