கால்வாயில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோண்டாவில் கால்வாயில் இன்று சிற்றூந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 15 பேருடன் பயணித்த சிற்றூந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில்
Published August 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோண்டாவில் கால்வாயில் இன்று சிற்றூந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
15 பேருடன் பயணித்த சிற்றூந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.