Featured உலகம்

ஏமனில் படகு விபத்து – 68 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

ேமன் கடற்பகுதியில் சுமார் 150 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதில் 65இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 10 பேர்

Published August 12, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ேமன் கடற்பகுதியில் சுமார் 150 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதில் 65இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் பலர் எத்தியோப்பிய நாட்டினர் என்று நம்பப்படுவதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக நேற்று (3) இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

வளைகுடா அரபு நாடுகளில் வேலை தேடி ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறுபவர்களுக்கு ஏமன் ஒரு முக்கிய பாதையாக உள்ளது, மேலும் கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளதோடு பலர் காணாமல் போயுள்ளதாக IOM நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *