விளாடிமிர் புட்டினை சந்திக்கும் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்
Published August 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆங்கரேஜில் உள்ள அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க விமானப் படையின் ஒருங்கிணைந்த தளமான எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் ட்ரம்ப் மற்றும் புட்டின் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) இடம் பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச் சந்திப்பில் போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.