கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார் – இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா.
இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா, கஜகஸ்தானில் இடம்பெற்ற அல்மைட்டி மாஸ்டர்ஸ் கினாவ் கிண்ண செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை...
Published August 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா, கஜகஸ்தானில் இடம்பெற்ற அல்மைட்டி மாஸ்டர்ஸ் கினாவ் கிண்ண செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளார்.
அர்மேனியாவின் ஆர்தர் டேவிட்யானை 9வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய வீரர் ரோகித் கிருஷ்ணா வீழ்த்தியதன் மூலம் இவ் உயரிய கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளார்.
சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 20 வயதான ரோகித் கிருஷ்ணா இந்தியாவின் 89-வது கிராண்ட்மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.