இஸ்ரேலுக்கு 100 மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து கடிதம்.
காஸா பகுதியில் உள்ள உதவி மையங்களுக்கு ஆயுதக் குழுக்களை அனுப்புவதை நிறுத்தக் கோரி...
Published August 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
காஸா பகுதியில் உள்ள உதவி மையங்களுக்கு ஆயுதக் குழுக்களை அனுப்புவதை நிறுத்தக் கோரி பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் கையெழுத்திட்ட கூட்டுக் கடிதமொன்று இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூட்டுக் கடிதத்தில் 100 ற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இக் கடிதத்தில், காஸாபகுதியில் அதிகரித்து வரும் பஞ்சத்தை எதிர்கொண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.