இந்திய வெளியுறவு அமைச்சர் ரஷ்யா பயணம்!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ் விஜயத்தின் போது அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும், ரஷ்ய அரசின் உயர் அதிகாரிகள் குழுவையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டதாக கூறப்படும் ரஷ்ய ஜனாதிபதியின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஊடக அறிக்கைகள் மேலும் கூறுகின்றன.
இதற்கிடையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.