இலங்கையில் – இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்! #video
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை இலங்கையில் மரியாதை செலுத்தும் முகமாக நிகழ்வுகள் இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது...
Published August 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை இலங்கையில் மரியாதை செலுத்தும் முகமாக நிகழ்வுகள் இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்தும், இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்துள்ளார். இந் நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.