ட்ரம்ப் – புட்டின் 6 வருடங்களுக்கு பிறகு சந்திப்பு !
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே ...
Published August 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே இன்று அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ட்ரம்ப் – புட்டின் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்குவதற்கு முன்பே ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.