வெளிநாட்டு திரைப்படங்களில் AI தொழில்நுட்பம்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக வெளிநாட்டு தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன...

Published August 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக வெளிநாட்டு தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

– வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் கூறுகையில்,

இந்த AI டப்பிங் அமைப்பு நாட்டில் நிலவும் மொழி சிக்கல்களை எளிதாக்கும். அதன்படி, அமெரிக்க சந்தையை ஈர்க்கக்கூடிய சர்வதேச திரைப்படங்களைக் கண்டுபிடித்து டப்பிங் செய்வது XYZ திரைப்பட நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான பணியாக காணப்படுகின்றது.

மேலும், XYZ திரைப்பட நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி மேக்சிம் கோட்ரே, அமெரிக்க சந்தையில் வெளிநாட்டு மொழி திரைப்படங்களின் வெளியீடு தற்போது குறைந்தபட்ச மட்டத்தில் உள்ளது என்றும், எதிர்காலத்தில் AI ஐப் பயன்படுத்தி அதை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers தொழில்நுட்பம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *