அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளில் ஓகஸ்ட் மாதத்தில் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளில் ஓகஸ்ட் மாதத்தில் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
– இவ் சுற்றுலா பயணிகளில்,
இந்தியாவிலிருந்து 19,572 பேர் (19.7%), ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேர், இத்தாலியிலிருந்து 7,641 பேர், பிரான்சிலிருந்து 6,870 பேர், மற்றும் சீனாவிலிருந்து 6,762 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 14,67,694 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் இந்தியர்கள் 2,68,694 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,42,347 பேர் மற்றும் ரஷ்யாவிலிருந்து 1,17,322 பேர் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.