LATEST
பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் திணைக்களம் உறுதி!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில பகுதிகளில் இடியுடன் மழை!பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் திணைக்களம் உறுதி!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில பகுதிகளில் இடியுடன் மழை!
உள்ளூர்

மன்னாரில் 16வது நாளாக தொடரும் போராட்டம்.

August 18, 2025 · Tamil Ceylon LK

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் 16 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் (18) ஆதரவு வழங்கும் வகையில் செல்வநகர் கிராம மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியும், மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ் போராட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும்,ஜனாதிபதிக்கும் இடையில் இன்று திங்கள் மாலை இடம் பெறவுள்ள விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி மன்னார் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›