ஹர்த்தாலை முன்னிட்டு – களுவாஞ்சிகுடியில் பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு இணங்க மட்டகளப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை...

Published August 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு இணங்க மட்டகளப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அவ்வகையில், களுவாஞ்சிகுடி பகுதியில் பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதி மற்றும் பிரதான வீதியை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள், என்பன பூட்டப்பட்டுள்ளன.

எனினும் உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என்பன வழமை போன்று இயங்கி வருவதோடு, கிராமங்களிலுள்ள உள்ளுர் வர்த்தக நிலையங்களும் வழமை போன்று செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

மக்கள் தமது அன்றாட செயங்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும், போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருவதையும் காணமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *