மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாண
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் எல்லை நிர்ணயம் மற்றும் தேர்தல் முறையில் சட்டச்சிக்கலுக்கு சட்டத் திருத்தம் மேற்கொள்வதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பின்னணியில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தின் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான அரசியல் ரீதியான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
