சர்வதேச மாணவர் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா.
6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
அமெரிக்காவில் 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் இவ்வாறு விசாக்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், குடியேற்றம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாணவர் விசாவை ரத்து செய்யும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.