தேசபந்து தென்னகோனின் முன் பிணை மனு நிராகரிப்பு.

நாட்டின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த முன்பிணை மனுவை...

Published August 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாட்டின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த முன்பிணை மனுவை, இன்று புதன்கிழமை (20) காலை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர பரிசீலித்தார்.

இதன்போது முன்னாள் பொலிஸ் மா அதிபர் சட்டதரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கோரிய முன் பிணை மனுவை நீதவான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.