பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் சந்திப்பு.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் ...
Published August 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ரர் ஹவுசில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப்பிரச்சனைகள், இராணுவத் தலையீடு தொடர்பிலும், நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வட கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.