மும்பையில் சீரற்ற வானிலை – ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு.

இந்தியாவின் தலைநகர் மும்பையில் சீரற்ற வானிலை...

Published August 21, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இந்தியாவின் தலைநகர் மும்பையில் சீரற்ற வானிலை,கனமழை காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பையில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மும்பை மற்றும் மும்பையின் அயல் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் மும்பையில் 800 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது, இது இந்த மாதம் மும்பை நகரம் பெறும் சராசரி மழையை விட அதிகமாகும், இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *