டயானா கமகேவிற்கு பிடியாணை.
முன்னாள் அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில்...
முன்னாள் அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க வியாழக்கிழமை (21) பிறப்பித்துள்ளார்.
நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி, தவறான தகவல்களைச் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்று, செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி விசா இல்லாமல் நாட்டில் தங்கியதாக டயானா கமகே மீது சிஐடி தாக்கல் செய்த ஏழு வழக்குகளின் சாட்சிய விசாரணை இன்று (21) நடைபெறவிருந்தது, மேலும் வழக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், மேல் நீதிமன்ற வழக்கு கோப்புகளின் பாதுகாவலர் மற்றும் வழக்கின் முதல் சாட்சியான வாதி ஆகியோரின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜரானர்.