வரலாற்று சாதனை படைத்த தென்னாபிரிக்கா.
தென்னாபிரிக்க - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகள்
Published August 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
தென்னாபிரிக்க – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனும் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம், அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக முறை ஒருநாள் தொடரை வென்ற அணி என்ற புதிய சாதனையை தென்னாபிரிக்கா அணி படைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து அணி 8 தொடர்களை கைப்பறியும், இந்தியா அணி 6 தொடர்களை கைப்பறியும் அடுத்த அடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், 2016 முதல் தற்போது வரை அவுஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.