சஷீந்திர ராஜபக்க்ஷ விற்கு விளக்கமறியல் நீடிப்பு.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ...
Published August 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் இருக்கும் நிலையில், அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை 2025 ஓகஸ்ட் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
