நாடு கடத்துவதில் தீவிரம் காட்டும் ட்ரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக..
Published August 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், மக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில், புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சட்டமானால், ஒரு நபர் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை ஆண்டுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் மது அருந்தியதை ஒத்துக் கொண்டிருந்தாலும், அதனடிப்படையில் அவரை நாடு கடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.