கீர்த்திசுரேஷ் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் திரைப்படம்.
இன்று வெளியாக இருக்கும் திரைப்படம்.
நடிகை கீர்த்திசுரேஷ் நடிப்பில் ஜே. கே. சந்த்ரு இயக்கத்தில், பாஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் தயாரிப்பில்,ஷான் ரோல்டன் இசையில் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ரெவால்வர் ரீதா (Revolver Rita)

இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ராதிகா சரத்குமார்,ரெடின் கிங்ஸ்லி,மைம் கோபி,செந்தில்ராஜன்,சூப்பர் சுப்பராயன்,சுனில் போன்ற நடிகர்ப்பட்டலாமே நடித்துள்ளனர்.
“ரெவால்வர் ரீதா” என்பது ஒரு அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். கீர்த்தி சுரேஷ் இதில் ஒரு வித்தியாசமான, தைரியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ரீதா என்ற பாத்திரம் ஒரு ரகசிய முகவரா, போலீஸா அல்லது குற்றவாளியா என்பது படம் முழுவதும் ஒரு புதிராகவே இருக்கும். இந்த திரைப்படம், பெண்கள் மையமாகக் கொண்ட அதிரடி கதையாகும்.

இப்படத்தின் டைட்டில் டீஸர் கடந்த வருடம் (2024) அக்டோபர் 17ஆம் திகதியன்று வெளியாகியிருந்த நிலையில் மக்கள் மத்தியில் பெரிய ஒரு வரவேற்பை பெற்றிருந்தது. அதே எதிர்ப்பார்ப்போடு பட வெளியிடுக்காகவும் ரசிகர் பட்டாளம் எதிர்பார்த்துள்ள நிலையில் இன்றைய தினம் (2025-08-27) விநாயகர்சதுர்த்தி/ திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவிருத்திருக்கிறார்கள்.

திரையரங்குகளில் வெளியீட்டுக்குப் பிறகு, “ரெவால்வர் ரீதா” திரைப்படம் Netflix தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இது படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு முக்கிய வருமானமாக இருக்கும்