செம்மணி – மனிதப் புதைகுழியில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று...
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை மொத்தமாக 166 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 150 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 34வது நாளாக நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
